sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அட்சய திருதியைக்காக சலுகை அறிவித்துள்ளது ஜோயாலுக்காஸ்

/

அட்சய திருதியைக்காக சலுகை அறிவித்துள்ளது ஜோயாலுக்காஸ்

அட்சய திருதியைக்காக சலுகை அறிவித்துள்ளது ஜோயாலுக்காஸ்

அட்சய திருதியைக்காக சலுகை அறிவித்துள்ளது ஜோயாலுக்காஸ்

1


ADDED : மே 06, 2024 11:52 PM

Google News

ADDED : மே 06, 2024 11:52 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இந்தியாவின் முன்னணி ஜூவல்லரி பிராண்ட்களில் ஒன்றான ஜோயாலுக்காஸ், அட்சய திருதியையை முன்னிட்டு, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. 50,000 ரூபாய்க்கு மேல் வைரங்கள், அன்கட் வைரங்கள் மற்றும் பிரஷ்யஸ் நகைகளை வாங்கினால், 2,000 ரூபாய் மதிப்புள்ள, கிப்ட் வவுச்சர்களை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக அளிக்கிறது.

அதுபோலவே, 50,000 மற்றும் அதற்கு மேல் தங்க நகைகளை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் 1,000 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் வவுச்சரை பெறுவர். 10,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நகைகளை வாங்கினால், 500 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் கிடைக்கும்.

இது, தற்போது வரும் மங்களகரமான அட்சய திருதியையை, மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட, மன நிறைவான ஷாப்பிங்கை மேற்கோள்ள ஜோயாலுக்காஸ் வழங்கும் சிறப்பு சலுகையாகும். வரும் மே 3 முதல் 12 வரை, இந்தியாவில் உள்ள அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் இந்த விழாக்கால சலுகையை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.

இந்த அட்சய திருதியையின் போது, வாடிக்கையாளர்கள் விதவிதமான கலெக் ஷன்களை தேர்ந்தெடுக்க, மில்லியனுக்கும் அதிகமான தனித்துவமான டிசைன்களை கொண்டுள்ள பிரமாண்ட ஆபரண அணிவகுப்புடன், ஜோயாலுக்காசும் தனித்துவமான தன் பிராண்டின் புதிய டிசைன்களை வடிவமைத்து உள்ளது.

இந்த விசேஷ விழாக்கால சலுகை குறித்து, ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ''இந்த அட்சய திருதியையின் மங்களகரமான சந்தர்ப்பத்தில், இந்த சலுகைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,'' என்றார்.

இந்த அட்சய திருதியை சலுகைகள், இந்தியா முழுதும் உள்ள ஜோயாலுக்காஸ் ஷோரூம்களில் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us