ADDED : ஆக 02, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ரேஷன் கடைகளில் கடந்த மாதம் துவரம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள், இம்மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.
இதுகுறித்து, உணவு வழங்கல் துறை இயக்குனர் விடுத்த செய்திக்குறிப்பு:
ஜூலையில் சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்கள் முழுதுமாக நகர்வு செய்யப்படவில்லை.
இதனால், கார்டுதாரர்கள் அம்மாதத் திற்கான துவரம் பருப்பு, பாமாயில் முழுதுமாக பெற இயலவில்லை. ஜூலையில் வாங்காதவர்கள், அவர்களுக்கான ஜூலை மாத பருப்பு, பாமாயிலை இம்மாதம் வாங்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.