ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு துரோகம் மத்திய அரசை விமர்சிக்கிறார் ஜோதிமணி
ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு துரோகம் மத்திய அரசை விமர்சிக்கிறார் ஜோதிமணி
ADDED : ஆக 16, 2024 08:32 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட விராலிமலையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், கரூர் எம்.பி., ஜோதிமணி அளித்த பேட்டி:
தமிழகத்திற்கு மத்திய பா.ஜ., அரசு துரோகம் செய்கிறது. இந்தியாவில் அதிக வரி கட்டும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகம் செலு;த்து ஒரு ரூபாய் வரியில், 29 பைசாவை தான் திருப்பிக் கொடுக்கின்றனர். அதையும் கூட போராடித்தான் பெற வேண்டி உள்ளது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழக ரயில் வழி தடங்களுக்கு 976 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து. தற்போது வெளிவந்துள்ள பிங்க் புத்தகத்தில் 301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய வழித்தடத்தில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. இரட்டை வழித் தடம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், கரூர், திண்டுக்கல் வழித் தடத்தில் இடைக்கால பட்ஜெட்டில் 150 கோடி நிதியும், ஈரோடு, கரூர் வழித்தடத்தில் இடைக்கால பட்ஜெட்டில் 150 கோடி நிதியும், ஈரோடு, பழனி வழித்தடத்தில் இடைக்கால பட்ஜெட்டில் 100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இவற்றிற்கு பிங்க் புத்தகத்தில் வெறும் ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கி உள்ளனர். இந்த தொகை டீ, காபி வாங்கி சாப்பிடக் கூடபோதாது. அறிவிக்கப்பட்ட நிதியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஒதுக்கி, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமானப்படுத்தி உள்ளனர்.
பொதுபட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் அநீதி இழைத்த மோடி அரசு, ரயில்வே திட்டங்களில் அதே துரோகத்தை அரங்கேற்றியுள்ளது. பார்லி., கூட்டத்தொடர் நடைபெறும்போது, பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டிருந்தால், பெரிய பிரளயமே வெடித்திருக்கும்.
தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.,க்களும் பிரச்னையை கிளப்புவோம் என்று பயந்து, தகவலை முன்கூட்டயேி வெளியிடாமல் தற்போது வெளியிட்டுள்ளனர். உடனடியாக, ரயில்வே பட்ஜெட்டை திரும்ப பெற வேண்டும். உண்மையான நிதியை ஓதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தை அவ்வளவு எளிதாக பா.ஜ., அரசு கடந்து போய் விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

