ADDED : ஜூன் 23, 2024 09:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி : தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆனார்.
இவ்விழா முடிந்ததும் கனிமொழி எம்.பி.,யிடம் பேட்டி எடுக்கலாம் என பத்திரிகையாளர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
ஆனால் விழா முடிந்து வெளியே வந்த கனிமொழி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து கேள்வி கேட்பார்கள் என்பதால் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் விறுவிறு என வெளியேறினார். அவரது கார் அருகில் சென்று சில நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ''மற்றொரு கூட்டம் உள்ளது,'' என கூறிய அவர் கார் கண்ணாடியை மூடியபடி வேகமாக சென்றார்.

