ADDED : ஆக 17, 2024 12:59 PM

தூத்துக்குடி: 'மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து நான் சமூக வலைதளத்தில் கண்டனம் பதிவிட்டுள்ளேன். நடிகை குஷ்புவை முதலில் அதை பார்க்க சொல்லுங்கள்' என நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் கனிமொழி கூறியதாவது: மருத்துவ மாணவி கொலை தொடர்பாக நான் சமூக வலைதளத்தில் கண்டனம் பதிவிட்டுள்ளேன். நடிகை குஷ்புவை முதலில் அதை பார்க்க சொல்லுங்கள். பிறகு பேச சொல்லுங்கள். மருத்துவர்கள் வேலை நிறுத்தம் குறித்து, நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்களை விடுவிப்பதில் சட்ட சிக்கல் இருப்பதால் அவர்களை விடுவிப்பது கடினமாக இருக்கிறது. தொடர்ந்து முதல்வர் விடுவிக்க வலியுறுத்தி வருகிறார். நாங்களும் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் அவர்களை விடுவிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

