ADDED : ஏப் 30, 2024 06:11 AM
சென்னை : அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக, ஐந்தாவது முறையாக கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ரயில்வேயில் 19 மண்டலங்களும், ஐ.சி.எப்., உள்ளிட்ட ஏழு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
பல்வேறு தொழிற்சங்கங்கள் இருந்தாலும், ஏ.ஐ.ஆர்.எப்., எனப்படும், அகில இந்திய ரயில்வே சம்மேளனம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருக்கிறது.
இந்த சம்மேளனம் துவங்கி, 101வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் தலைவராக, ஐந்தாவது முறையாக கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''புதிய பென்ஷன் திட்டம் தொழிலாளர்களை பாதிப்பதாக இருப்பதால், அதை மாற்ற வேண்டும் என, நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.
''இதன் விளைவாக, மத்திய அரசு ஒரு உயர்மட்ட குழு அமைத்துள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தை மாற்றி, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்,'' என்றார்.

