ADDED : ஆக 22, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கருணாநிதியின் நுால்கள், உரிமைத்தொகை வழங்காமல் நாட்டுடைமை ஆக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சி துறையால், தமிழ் சான்றோர்களின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன. இந்த நுால்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, அவர்களது மரபுரிமையாளர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை, 179 தமிழர்களின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக, நுால் உரிமைத்தொகையாக, 14.4 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
அந்த வரிசையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நுால்களும், தமிழக அரசு வாயிலாக நுால் உரிமைத்தொகை எதுவும் இன்றி, நாட்டுடைமை ஆக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

