கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி ஆக., 2வது வாரத்தில் நடக்கிறது
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி ஆக., 2வது வாரத்தில் நடக்கிறது
ADDED : ஜூலை 24, 2024 10:40 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி, சென்னை சாலையில், பெத்தனப்பள்ளி பஞ்.,ல் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மைதானத்தில் ஆக., 2வது வாரத்தில் நடக்கவுள்ளது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது.
கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., நேற்று அரங்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அரசு துறையின், 50 அரங்குகள், மேடைகள் அமைக்கும் பணி, 30 சதவீதம் முடிந்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள், 80 தனியார் கடைகள், உள்ளிட்டவைகளுக்கு வரும், 29ல் டெண்டர் விடப்படும். தேசிய நெடுஞ்சாலையோரம் கண்காட்சி நடக்க உள்ளதால், போக்குவரத்திற்கு பாதிப்பின்றி பொதுமக்கள் வந்து செல்ல தனித்தனி பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.
மா சீசன் முடிந்த பின் நடக்க போகும் மாங்கனி கண்காட்சி யாருக்கும் பயனில்லை என, விவசாயிகள் கூறினர்.

