கும்பக்கரை- - கொடைக்கானல் ரோடு தடுப்புச்சுவர் மழையால் சேதம்
கும்பக்கரை- - கொடைக்கானல் ரோடு தடுப்புச்சுவர் மழையால் சேதம்
ADDED : மே 13, 2024 07:11 AM
பெரியகுளம்: கொடைக்கானல் அடுக்கம் ரோடு கும்பக்கரை செல்லும் ரோட்டில் மழையால் தடுப்பு சுவர் ரோட்டில் விழுந்தது. சீரமைப்பு பணிக்காக நேற்று மாலை முதல் போக்குவரத்து அனுமதி நிறுத்தப்பட்டது.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி ரோடு உள்ளது. அங்கிருந்து அடுக்கம் வழியாக 30 கி.மீ., துாரத்தில் குறுகிய ரோடு வழியாக பெருமாள்மலை உள்ளது.
பெருமாள்மலையில் இருந்து 22 கி.மீ., துாரத்தில் கொடைக்கானல் செல்லலாம். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் கொடைக்கானல் செல்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் மலைப் பகுதி விவசாயிகள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் இந்த ரோட்டினை பயன்படுத்துகின்றனர்.
இதனால் பெரியகுளம்- காட்ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் 22 கி.மீ., துாரமும், 45 நிமிடம் பயண நேரமும் குறையும்.
ரோடு மூடப்பட்து: அடுக்கம் முதல் கும்பக்கரை வழியாக பெரியகுளம் செல்லும் ரோட்டில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக அடுக்கம் பகுதியில் ரோட்டோர தடுப்புச் சுவர் ரோட்டில் விழுந்தது.
இதனால் சீரமைப்புப் பணிக்காக நேற்று மாலை 6:00 மணியிலிருந்து கும்பக்கரை- அடுக்கம் வழியாக பெருமாள்மலை செல்லும் ரோடு மூடப்பட்டது என, கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை, தேவதானப்பட்டி வனச்சரகம் தெரிவித்துள்ளது.