ADDED : ஜூன் 27, 2024 11:53 PM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டத்துடன் நடந்தது.
விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகளுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. 25ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று, தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி காலை 8:10 மணிக்கு உற்சவர் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். 8:30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. 10:30 மணிக்கு தேர் கோவில் நிலையை அடைந்தது. தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவர் பெருமாளுக்கும் மகா தீபாராதனை நடந்தது.
தேரோட்டத்தில் கலெக்டர் பழனி, விசாலாட்சி பொன்முடி மற்றும் விழுப்புரம், கடலுார், புதுச்சேரி சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் ராமலிங்கம், ஆய்வாளர் லட்சுமி, அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

