சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 30, 2024 02:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கடலூர் அ.தி.மு.க. பிரமுகர் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.
யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. மக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழலில் சட்டம் ஒழுங்கை காப்பதாக முதல்வர் தம்பட்டம் அடித்துக் கொள்வது நகைமுரண். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.