தேர்வு முறைகளை தீர்மானிப்பதில் மாநில உரிமை மீட்போம்: ஸ்டாலின்
தேர்வு முறைகளை தீர்மானிப்பதில் மாநில உரிமை மீட்போம்: ஸ்டாலின்
ADDED : ஜூன் 24, 2024 06:43 AM

சென்னை : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: யு.ஜி.சி., நெட் தேர்வு ரத்தானதை தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது, ஆயிரக்கணக்கான மருத்துவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.
இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வாக இல்லாமல், கையாளாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின், உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளது.
தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத் தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதி செய்ய வேண்டும். அதை, உயர் கல்விக்கு அடிப்படையானதாக்க வேண்டும்.
தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில், மாநில அரசின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, நம் மாணர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம், மீண்டும் நம்பிக்கையை விதைக்க வேண்டும்; சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிட நாம் கைகளை கோர்ப்போம்.
இவ்வாறு கூறியுள்ளார்.