ADDED : ஜூலை 04, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில், ஆண்டுதோறும், 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அதை வெளியிட, 1 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திலும் பெறலாம்.
மேலும், tn.gov.in/forms என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி நாள்.