தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஓட்டுப்பதிவு குறைவு: ஆய்வு செய்ய நிதி

ஓட்டுப்பதிவு குறைவு: ஆய்வு செய்ய நிதி

ஓட்டுப்பதிவு குறைவு: ஆய்வு செய்ய நிதி


ADDED : ஏப் 23, 2024 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'ஓட்டுப்பதிவு குறைந்த தொகுதிகளில், ஓட்டுப்பதிவு ஏன் குறைந்தது என்பதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட தேர்தல் அலுவலர் விரும்பினால், அதற்கான நிதியை, தேர்தல் கமிஷன் வழங்கும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவை அதிகரிக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கடந்த 2019 லோக்சபா தேர்தலை விட, இரண்டு சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளன.

இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:

ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மக்களிடம் ஏன் ஓட்டளிக்கவில்லை என்று கேட்க வேண்டும்.

மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதியில் ஏன் ஓட்டுப்பதிவு குறைந்தது என ஆய்வு செய்யலாம். குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியில் ஏன் ஓட்டுப்பதிவு குறைந்தது என, ஆய்வு செய்யலாம். இதற்கு தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்றால், அதற்கு தேவையான நிதி வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us