மதுரையில் தி.மு.க., நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு: ஐகோர்ட் நோட்டீஸ்
மதுரையில் தி.மு.க., நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு: ஐகோர்ட் நோட்டீஸ்
UPDATED : மார் 22, 2024 12:42 PM
ADDED : மார் 22, 2024 12:42 AM
மதுரை:மதுரை திடீர்நகர் சாலையை, தி.மு.க., கவுன்சிலர் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில், நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு:
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் தென்புறம், ஒரு ேஹாட்டலின் வடபுறம் திடீர் நகர் செல்லும் சாலை உள்ளது.
இதை மாநகராட்சி 76வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், 76வது வார்டு பகுதி தி.மு.க., செயலர் கண்ணன், வட்டச் செயலர் யோகராஜ் ஆக்கிரமித்துள்ளனர்; சட்ட விரோதமாக கட்டுமான பணி மேற்கொண்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், கார்த்திக், கண்ணன், யோகராஜிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, 2 வாரங்கள் ஒத்திவைத்தது.

