ADDED : பிப் 23, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்., 25 முதல் 28 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் பிப்., 25ல் பிரதோஷம், பிப்., 26ல் மகாசிவராத்திரி, பிப்., 27ல் அமாவாசை வழிபாடு, பூஜைகள் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு பிப்., 25 முதல் 28 வரை 4 நாட்கள் தினமும் காலை 6:30 முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பக்தர்கள் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது. இரவில் அங்கு தங்க அனுமதி இல்லை. தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் உடனடியாக அடிவாரம் திரும்ப வேண்டும் என செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.