நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் பரம்பொருள் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு, சமீபத்தில் மாணவியர் மத்தியில் உரையாற்றினார். அவரது பேச்சு மாற்றுத்திறனாளிகள் மனம் நோகும்படி இருந்ததாக தந்த புகார் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.
பின் 3 நாட்கள் காவலில் எடுத்து திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். போலீஸ் காவல் முடிந்த நிலையில் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்., 20 வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.