நாய்களை ஏவி பூனையை கொன்று 'இன்ஸ்டா'வில் பதிவிட்டவர் கைது
நாய்களை ஏவி பூனையை கொன்று 'இன்ஸ்டா'வில் பதிவிட்டவர் கைது
ADDED : ஏப் 02, 2024 02:07 AM
முசிறி: நாய்களை விட்டு பூனையை கடித்து கொல்ல வைத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேலதொட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 27. இவர், சில வாரங்களுக்கு முன், தான் பழக்கப்படுத்திய நாய்களுக்கு மத்தியில், வளர்ப்பு பூனையை விட்டு, அவற்றை கடிக்க நாய்களுக்கு உத்தரவிட்டார்.
அங்குள்ள ஐந்து நாய்களும் பூனையை கடித்து குதறியதில், அது துடிதுடித்து இறந்தது. இந்த கொடூரத்தை தன் மொபைல் போனில் பதிவு செய்த விஜயகுமார், அதை, 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ பரவி வருகிறது.
இதையடுத்து, கொடூர செயலில் ஈடுபட்ட விஜயகுமார் மீது, வாழவந்தி வி.ஏ.ஓ., சபாபதி, போலீசில் புகார் அளித்தார்.
ஜெம்புநாதபுரம் போலீசார், வாலிபர் விஜயகுமாரை நேற்று முன்தினம் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், இதுபோல விலங்குகளை கொன்றுள்ளாரா என போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரிக்கின்றனர்.

