அலைபேசி பேட்டரி வெடித்து டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி; மற்றொருவர் காயம்
அலைபேசி பேட்டரி வெடித்து டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி; மற்றொருவர் காயம்
ADDED : ஜூலை 22, 2024 12:45 AM
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் டூவீலரில் சென்ற போது அலைபேசி பேட்டரி வெடித்து நிலை தடுமாறி விழுந்த ரஜினி பலியானார். பின்னால் அமர்ந்து சென்ற அவரது நண்பர் பாண்டி காயமடைந்தார்.
பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் ரஜினி 36, திருமணம் ஆகவில்லை. தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தார். நேற்று ரஜினியும், நண்பர் ஆற்றுப்பாலம் பகுதியைச் சேர்ந்த பாண்டியும் 31, துணி எடுக்க டூவீலரில் மதுரை சென்றனர். அங்கிருந்து பரமக்குடிக்கு புறப்பட்டனர்.
கமுதக்குடி அருகே மாலை 5:00 மணிக்கு வந்த போது ரஜினியின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசி பேட்டரி வெடித்தது. அவர் தொடையில் ரத்தக்காயம் ஏற்பட்டு நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவயிடத்தில் பலியானார். பின்னால் அமர்ந்திருந்த பாண்டி காயத்துடன் ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

