ADDED : ஜூலை 03, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனராக டாக்டர் ஆர்.மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக இருந்த ஆர்.விமலா, பணி ஓய்வுக்கு பின், ஒப்பந்த அடிப்படையில், சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனராக, 2019ல் நியமிக்கப்பட்டார்.
ஒப்பந்த காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்ததை தொடர்ந்து அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீனாக இருந்த ஆர்.மணி, அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.