திமுகவில் பொறுப்புகளுக்கு வருவதற்கு ஏராளமான இளைஞர்கள் தயார்: உதயநிதி
திமுகவில் பொறுப்புகளுக்கு வருவதற்கு ஏராளமான இளைஞர்கள் தயார்: உதயநிதி
ADDED : ஆக 25, 2024 06:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திமுகவில் கட்சியில் சேருவதற்கும் பொறுப்புகளுக்கு வருவதற்கும் ஏராளமான இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் திமுக பொறியாளர் அணி நடத்தும் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. திமுக கட்சியில் சேருவதற்கும் பொறுப்புகளுக்கு வருவதற்கும் ஏராளமான இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர்.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பற்றி 28 ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி பேசியது தற்போதும் பொருந்தும்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி செலவாகி்றது. 50:50 பங்கு நிதி என்றாலும் இது வரை மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட தரவில்லை என்றார்.

