ADDED : பிப் 22, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தேனி மாவட்டம் உத்தமபாளையம்அருகே உள்ள பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 41; மாவோயிஸ்ட். இவர், பெரியகுளம் அருகே, முருகமலைப்பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில், சக மாவோயிஸ்டுகளுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இவரை, 10 ஆண்டுகளுக்கு முன், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவந்த கார்த்திக், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இவரை, கியூ பிரிவு மற்றும் மதுரை மற்றும் தேனி மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகம் அருகே கார்த்திக்கை, கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்; மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

