வீடு புகுந்து தாலி செயின் பறிப்பு முகமூடி ஆசாமிகள் துணிகரம்..
வீடு புகுந்து தாலி செயின் பறிப்பு முகமூடி ஆசாமிகள் துணிகரம்..
ADDED : ஆக 24, 2024 05:31 AM
வானுார்: ஆரோவில் அருகே வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 8 சவரன் தாலி செயினை பறித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த நரசிங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் இளவரசன் மனைவி சவுமியா,24; இவர் தனது கணவருடன், வானுார் அடுத்த ராவுத்தன்குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அறையில் சவுமியா மற்றும் அவரது கணவரும் துாங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 2:30 மணிக்கு, வீட்டினுல் புகுந்த முகமூடி ஆசாமிகள், சவுமியா கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி செயினை பறித்தனர். திடுக்கிட்ட சவுமியா எழுந்து கூச்சலிட்டார். அதற்குள் முகமூடி ஆசாமிகள் அருகில் உள்ள சவுக்கு தோப்புக்குள் புகுந்து தலைமறைவாகினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, முகமூடி ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

