ADDED : மே 28, 2024 07:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. வேலூரிலும் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. அடுத்ததாக திருப்பத்தூரில் - 102 டிகிரியும் பாரன்ஹீட் மதுரை மாநகரில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், பரங்கிப்பேட்டையில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், புதுச்சேரியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், நாகப்பட்டினத்தில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி இருந்தது. தஞ்சாவூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், கடலூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி இருந்தது.