ADDED : ஆக 08, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 140 கோடி ரூபாயில், 500 சிறுபாலங்கள்; 60 கோடி ரூபாயில், 500 ரேஷன் கடைகள் கட்ட, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ரேஷன் கடைகளில் 500 கார்டுகளுக்கு மேல் இருந்தால், அதற்கான கட்டடத்தை, 13.56 லட்சம் ரூபாயிலும், 500 கார்டுகளுக்கு கீழ் உள்ள கடைகளை, 9.97 லட்சம் ரூபாயிலும் கட்ட, அரசு அனுமதி அளித்துள்ளது.
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி தொடர்பான திட்டங்களை செயல்படுத்த, 30 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது. இதைத் தொடர்ந்து, தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்து, மானியங்களை வழங்க, வேளாண் துறை செயலர் அபூர்வா, தோட்டக்கலைத் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டு உள்ளனர்.