ADDED : மே 10, 2024 04:25 AM
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு 20ம் தேதி நிறைவு பெறுகிறது. 24ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும். 28 முதல் மாணவர் அட்மிஷன் வழங்கப்படும். ஜூலை, 3ல் வகுப்புகள் துவக்கப்படும்.
_____________
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியாகின்றன.
தேர்வு முடிவை, www.tnresults.nic.in/, www.dge.tn.gov.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
_____________
ஐ.டி.ஐ., எனப்படும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர, 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் ஜூன் 7க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
_____________
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., என்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்வி நிறுவனங்களில், இளநிலையில், பி.எஸ்., முதுநிலையில், எம்.எஸ்., மற்றும் பி.எஸ்., - எம்.எஸ்., இரட்டை பட்டப்படிப்பு ஆகியவை நடத்தப்படுகின்றன. வரும் கல்விஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள், https://iiseradmission.in/ என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளன. விண்ணப்பங்களை, வரும், 13ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு,மாணவர்களுக்கு ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.