ADDED : ஜூன் 25, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இணையதள இணைப்பு பெற்ற, 20,332 அரசு பள்ளி களில், ஸ்மார்ட் வகுப்புகளை நடத்த, 1.35 லட்சம் ஆசிரியர்களுக்கு, கையடக்க கணினி வழங்கப்பட உள்ளதாக, பள்ளிகல்வி துறை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, 79,723 பேருக்கு கையடக்க கணினி வழங்கும் பணி துவங்கியுள்ளது.
_____________
பள்ளி கல்வி செலவுக்கு நடப்பு நிதியாண்டுக்கு, கடந்த ஆண்டை விட, 3,723 கோடி ரூபாய் அதிகமாக, 44,042 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுடன் இணைந்து, 34,117 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.