ADDED : ஜூலை 09, 2024 12:21 AM
பண்டைய தமிழ் பண்பாடு, நாகரிகம் பற்றி ஆய்வுகளை, உலக அறிஞர்கள் ஏற்கும் வகையில், அதன் கருத்துகளை வெளியிடும் அறிஞர் அல்லது அறிஞர் குழுவுக்கு, 'செம்மொழி விருது' வழங்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த நிதியில் தரப்படும் இந்த விருதில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், கருணாநிதியின் வெண்கலச்சிலை ஆகியவை வழங்கப்படும்.
இவ்விருதுக்கு, 'www.cict.in' என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை தரவிறக்கி, பூர்த்தி செய்து, வரும் 15ம் தேதிக்குள், 'பதிவாளர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி சாலை, பெரும்பாக்கம், சென்னை -- 600 100' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
_____________
உலக வங்கி நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும், பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில், ஏற்கனவே மூன்று கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், நான்காம் கட்டமாக, மாதிரி கிராமங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு, 154 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இக்கிராமங்களில், எட்டு துறைகள் சார்பில், 3.08 கோடி ரூபாயில், நீர் மேலாண்மை உட்பட, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நீர்வளத் துறைக்கு ஒதுக்கப்பட்ட, 40 கிராமங்களில் மாதிரி கிராம திட்டத்தை செயல்படுத்த அரசு, 80 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது.
_____________
ஐக்கிய அரபு அமீரகத்தில், 'ஸ்டீல் பிக்சர்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளமாக 27,600 ரூபாய். விருப்பம் உள்ள ஆண் பணியாளர்கள், www.omcmanpower.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

