ADDED : ஜூலை 25, 2024 01:05 AM
* பாரம்பரியத்தை பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல், தகவல்களை பரப்புதல், புத்தகங்கள், கட்டுரைகள், விரிவுரைகள் வழங்குவது, மரபு நடை, களப்பணி, ஆய்வுப்பணி, கல்விப்பணிகளில் ஈடுபடுவோருக்கு, தமிழ் மரபு அறக்கட்டளை, 'பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன் மரபு நாயகர் விருதை' வழங்குகிறது. இதற்கு தகுதியான நபரை, அடுத்த மாதம் 18ம் தேதிக்குள், https://bit.ly/THT-SS- Nomination-Form என்ற இணைப்பில் பரிந்துரைக்கலாம்.
* தமிழக பள்ளிக்கல்வித்துறை மார்ச்சில் நடத்திய பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, கடந்த மாதம் துணைத் தேர்வு நடந்தது. பிளஸ் 2வுக்கு நாளை பிற்பகல், 2:00 மணிக்கும்; 10ம் வகுப்புக்கு, வரும், 30ம் தேதி பிற்பகல், 2:00 மணிக்கும் தேர்வு முடிவு வெளியாகிறது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு, வரும், 31ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு தேர்வு முடிவு வெளியாகிறது. முடிவுகளை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

