sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்

/

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : ஜூலை 31, 2024 12:37 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி ஆசிரியர் சங்கங்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் கார்மேகம் அனுப்பியுள்ள கடிதத்தில், 'அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் அறிவிக்கப்படும்.

இது தொடர்பாக, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. புதிய கல்லுாரிகளில் மாற்றுப் பணியில் உள்ள ஆசிரியர்களை, அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய கல்லுாரிகளுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

----

மலேஷியாவில் பணிபுரிய, மாதம் 50,000 சம்பளத்தில் கட்டுமான பணியாளர்கள், 28,000 சம்பளத்தில் உதவியாளர்கள், 40,000 சம்பளத்தில் வெல்டர்கள் தேவைப்படுகின்றனர்.

இதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 26க்குள் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆகஸ்ட் 3க்குள், ovemclnm@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பலாம் என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

_____________

'கூட்டுறவு வங்கிகளில், பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற, ஒரு சுய உதவிக்குழுவுக்கு அதிகபட்சம், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

'இந்த உச்சவரம்பு தற்போது, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது; தகுதியான குழுக்களுக்கு அதிக கடன் வழங்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகளுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.

_____________

கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 1 துணைத்தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத்தேர்வு நடந்தது.

அதன் முடிவுகள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us