ADDED : ஆக 02, 2024 01:04 AM
தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படும் தகைசால் தமிழர் விருது, நடப்பாண்டில், காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின விழாவின் போது அவருக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
_____________
தணிக்கை துறைகளில், கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆய்வாளர், உதவி தணிக்கை ஆய்வாளர் பணிஇடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியே, 780 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை நேற்று, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
_____________
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி கட்டடங்களில் உடைப்புகள், விரிசல்கள், நீர்க்கசிவு போன்ற பழுதுகளை சரி செய்ய, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.