ADDED : ஆக 03, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற தகுதியுள்ள, பழங்குடியின இளைஞர்களுக்கு, வரும் 10ம் தேதி முதல், ஆன்லைன் வழியே சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாமக்கல், திருவண்ணா மலை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, வேலுார் மாவட்டங்களில், இப்பயிற்சி வகுப்பு துவக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க, கடந்த மாதம் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, விண்ணப்பிக்கும் அவகாசம், வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்த விபரங்கள், https://www.tn.gov.in/department/7ல் வெளியிடப்பட்டுள்ளன.