எதிர்க்கட்சியினர் பேசும் போது அமைச்சர் 'ஆப்சென்ட்'
எதிர்க்கட்சியினர் பேசும் போது அமைச்சர் 'ஆப்சென்ட்'
ADDED : ஜூன் 28, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்டசபையில் நேற்று காலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நுால் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
இந்த துறைகளின் அமைச்சர் உதயநிதி, மானிய கோரிக்கை விவாதம் துவங்கி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேசும் வரை, சட்டசபையில் இருந்தார். அவர் பேசி முடித்ததும் வெளியில் சென்றார்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பா.ஜ., சரஸ்வதி, பா.ம.க., அருள் போன்றோர் பேசுகையில், அவர் சபையில் இல்லை. இறுதியாக தி.மு.க., - எம்.எல்.ஏ., முத்துராஜா பேசும்போது, அமைச்சர் உதயநிதி மீண்டும் சபைக்கு வந்தார்.

