காற்றின் வேக மாறுபாட்டால் 16ம் தேதி வரை மிதமான மழை
காற்றின் வேக மாறுபாட்டால் 16ம் தேதி வரை மிதமான மழை
ADDED : செப் 10, 2024 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
நாட்டின் பல்வேறு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலையே காணப்படுகிறது.
இந்த பின்னணியில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலை, வரும், 16 வரை தொடரும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.