தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வரும் 29ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும்

வரும் 29ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும்

வரும் 29ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும்


ADDED : ஆக 24, 2024 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதே நிலை, வரும் 29ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மன்னார் வளைகுடா, தென்மாவட்ட கடலோரம் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், வரும் 27 வரை, மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும்.

வடக்கு ஆந்திர கடலோரம், வங்கக் கடலின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us