sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏப்., 14ல் மோடி விருதுநகர் வருகிறார் 9, 10, 13லும் தமிழகத்தில் பிரசாரம்

/

ஏப்., 14ல் மோடி விருதுநகர் வருகிறார் 9, 10, 13லும் தமிழகத்தில் பிரசாரம்

ஏப்., 14ல் மோடி விருதுநகர் வருகிறார் 9, 10, 13லும் தமிழகத்தில் பிரசாரம்

ஏப்., 14ல் மோடி விருதுநகர் வருகிறார் 9, 10, 13லும் தமிழகத்தில் பிரசாரம்


ADDED : ஏப் 03, 2024 01:42 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பிரதமர் நரேந்திர மோடி ஏப்., 14ல் விருதுநகரில் பிரசாரம் செய்ய உள்ளார். முன்னதாக 9, 10, 13ல் வேலுார், தென் சென்னை, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

அதன் விபரம்:

* ஏப்., 9 மாலை 4:00 மணிக்கு பிரதமர் வேலுாரில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, 'ரோடு ேஷா' பிரசாரம் செய்கிறார். அதில் தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியா, கிருஷ்ணகிரி பாஜ., வேட்பாளர் நரசிம்மன், கள்ளக்குறிச்சி பா.ம.க., வேட்பாளர் தேவதாஸ், திருவண்ணாமலை பா.ஜ., வேட்பாளர் அஸ்வத்தாமன், ஆரணி பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமார், சிதம்பரம் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி; கடலுார் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு ஆதரவாக, ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகிறார்

* மாலை 6:00 மணிக்கு மோடி, தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட தி.நகரில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக ரோடு ேஷா பிரசாரம் செய்கிறார்; அதில் மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளர் வினோஜ் செல்வம், வட சென்னை வேட்பாளர் பால்கனகராஜ், திருவள்ளூர் வேட்பாளர் பொன்.பாலகணபதி, ஸ்ரீபெரும்புதுார் த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், காஞ்சிபுரம் பா.ம.க., வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் பா.ம.க., வேட்பாளர் கே.பாலுவுக்கு, மோடி ஓட்டு சேகரிக்கிறார்

* ஏப்.10 காலை 11:00 மணிக்கு நீலகிரியில் மத்திய அமைச்சர் முருகனுக்கு ஆதரவாக, 'ரோடு ேஷா' பிரசாரம் செய்கிறார். மதியம் கோவை பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கலில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்

* ஏப்.13 காலை 11:00 மணிக்கு பெரம்பலுாரில் பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி வேட்பாளரான பாரிவேந்தருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அதில், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பேசுகிறார்.

* ஏப்.,14ல் விருதுநகரில் போட்டியிடும் நடிகை ராதிகாவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அங்கு காலை 11:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

தென்மாவட்டங்களில் ரோடுஷோ நடத்தும் அமித்ஷா


லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்.4, 5ல் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்தப் பயணத்தில் 3 தொகுதிகளில் அவர் ரோடுஷோ நடத்தி பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்கிறார்.நாளை (ஏப். 4ல்) டில்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு மாலை 3:45 மணிக்கு அமித்ஷா வருகிறார்.
இங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்கிறார். அங்கு கூட்டணி கட்சியான அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் ரோடுஷோநடத்தி பொதுமக்களை சந்திக்கிறார்.மாலை 6:45 மணிக்கு மதுரை திரும்பும் அமித்ஷா, பழங்காநத்தம் சந்திப்பில் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை அறிமுகப்படுத்தி பேசுகிறார். மதுரை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பொறுப்பாளர்களாக உள்ளவர்களையும் சந்திக்க உள்ளார். பின்னர் இரவில் பசுமலை கேட் வே ஓட்டலில் தங்குகிறார்.மறுநாள் (ஏப்.5) காலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
தொடர்ந்துஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா அங்கும் ரோடுஷோ நடத்தி கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். அங்கிருந்துஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்கிறார். அங்கு கூட்டணி கட்சி வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ரோடுஷோ நடத்தி ஆதரவு திரட்டுகிறார். அந்நிகழ்ச்சி முடிந்ததும் டில்லி புறப்படுகிறார்.








      Dinamalar
      Follow us