எம்.பி.பி.எஸ்., உறுதி சான்று: கல்லுாரிகளுக்கு அவகாசம்
எம்.பி.பி.எஸ்., உறுதி சான்று: கல்லுாரிகளுக்கு அவகாசம்
ADDED : ஏப் 22, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : இளநிலை மருத்துவ கல்வி வாரிய இயக்குனர் சாம்பு சரண்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
எம்.பி.பி.எஸ்., படிப்பை துவக்க அனுமதி பெற்ற மருத்துவக் கல்லுாரிகள், நிகர் நிலை பல்கலைகள் அனைத்தும், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய ஆண்டு உறுதியளிப்பு சான்றை, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம். அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் இதை செய்ய வேண்டும்.
இதற்கான தேதி ஏற்கனவே முடிந்தும், இதுவரை சில கல்லுாரிகள் சமர்ப்பிக்கவில்லை. அதனால், வரும் 25ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் சமர்ப்பிக்காவிட்டால், அக்கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

