ADDED : மார் 02, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஹோலி பண்டிகையை ஒட்டி, மும்பையில் இருந்து காட்பாடி, திருச்சி வழியாக கன்னியா குமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
மும்பை சி.எஸ்.டி.,யில் இருந்து, வரும் 10, 17ம் தேதிகளில் நள்ளிரவு, 12:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:15 மணிக்கு கன்னியாகுமரி செல்லும்
கன்னியாகுமரியில் இருந்து, வரும் 11, 18ம் தேதிகளில் மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் அதிகாலை 4:15 மணிக்கு மும்பை சி.எஸ்.டி., செல்லும்.
இந்த சிறப்பு ரயில், திருத்தணி, காட்பாடி, வேலுார், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக இயக்கப்பட உள்ளது. டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.