ADDED : ஏப் 27, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலர் கள் சீனிவாசன், 56, பூங்குழலி, 55, விஜயலட்சுமி, 43, ஆகியோரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மாலை 4:00 மணி வரை நடந்த சோதனையில், சீனிவாசன் வீட்டிலிருந்து 10 வங்கி கணக்கு புத்தகங்கள், 2 வங்கி லாக்கர் சாவிகள்; பூங்குழலி வீட்டில் 12 வங்கி கணக்கு புத்தகங்கள்; விஜயலட்சுமி வீட்டில் 2 வங்கி கணக்கு புத்தகங்கள், 1 வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும், இந்த மூவர் வீடுகளில் இருந்து அதிக மதிப்புடைய சொத்துக்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், தங்க பத்திரங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

