ADDED : ஆக 07, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில், வரும் 24 மற்றும் 25ம் தேதி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது.
இம்மாநாட்டை வணிக நோக்கமற்ற நிறுவனம் அல்லது அமைப்புடன் இணைந்து நடத்த, ஆறு வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, நிகழ்வு பங்களிப்பாளராக, தென்னிந்திய தொழில் வர்த்தக சபையை தேர்வு செய்ய, அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதை ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, அறநிலையத் துறை செயலர் சந்தரமோகன் வெளியிட்டுள்ளார்.