'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வில் நாராயணா மாணவர்கள் முன்னிலை
'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வில் நாராயணா மாணவர்கள் முன்னிலை
ADDED : ஜூன் 11, 2024 05:16 AM
சென்னை : ஐ.ஐ.டி.,க்களில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வு முடிவுகளில், நாராயணா கல்வி நிறுவன மாணவர்கள், முன்னிலை இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
இதுகுறித்து, நாராயணா கல்வி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாடு முழுதும் உள்ள, தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில், பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.
கூடுதல் பயிற்சி
இதில், அகில இந்திய தரவரிசையில், பொதுப்பிரிவில், 20 இடங்களில், ஏழு பேர் நாராயணா கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அகில இந்திய தரவரிசையில் முதல், 50 இடங்களில், 14 பேரும்; 100 இடங்களில், 31 பேரும் நாராயணா கல்வி நிறுவன மாணவர்கள் ஆவர். அகில இந்திய தரவரிசை பட்டியலில், நாராயணாவை சேர்ந்தவர்கள் 6 பேர் இடம் பிடித்துள்ளனர்.
தெலுங்கானா மாணவர் சந்தேஷ் பொகலப்பள்ளி அகில இந்திய அளவில், 3ம் இடம்; ராஜஸ்தானின் ராஜ்தீப் மிஷ்ரா 6ம் இடம்; ஆந்திராவின் பாலஆதித்யா, 11; ராஜஸ்தானின் ராகவ் சர்மா, 12; ஒடிசாவின் பிஸ்மித் சாஹூ 16; மஹாராஷ்டிராவின், ஆர்யன் பிரகாஷ், 17; கர்நாடகாவின், அமோக் அகர்வால், 20ம் இடம் பெற்றுள்ளனர்.
முதன்மை இடங்களை பெற்ற மாணவர்களை, நாராயணா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பி.சிந்துாரா பாராட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது:
நாராயணாவில் படிக்கும் மாணவர்களுக்கு பாடங்களின், கருத்து ஆழத்தை புரிந்து படித்தல், சிக்கலான கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தல் முறைகளில், பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் திறன் மதிப்பிடப்பட்டு, அவர்களின் கற்றல் முன்னேற்றம் அவ்வப்போது கணக்கிடப்பட்டு, அதற்கேற்ற கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வப்போது தேர்வுகள், விடைத்தாள்களை ஆய்வு செய்தல், ஜே.இ.இ., தேர்வுக்கு தேவையான முன் தயாரிப்புகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு இயக்குனர் பி.ஷாரணி கூறுகையில், ''மிகவும் சிறந்த தொழில்நுட்பத்துடன் மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளித்துள்ளதால், அவர்களால் தேர்வில் சாதிக்க முடிந்து உள்ளது.
தொடர் கண்காணிப்பு
வகுப்பறைகளில் மாணவர்களுக்கு முழுமையான கற்றல் முறையை கற்பித்தும், சிறந்த ஆசிரியர்களை கொண்டு, மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கியதும், இந்த முன்னேற்றத்துக்கு காரணம,''என்றார்.
நாராயணா கல்வி நிறுவனங்கள் குறித்த கூடுதல் தகவல்களை, www.narayanagroup.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
