ADDED : ஏப் 28, 2024 12:54 AM
சென்னை: முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்த ஏப்ரல் 19க்கு பின், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதியஅந்தஸ்தை பெற்றுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மோடி அரசு என்று பேசி வந்தவர்கள், சில நாட்களாக பா.ஜ., அரசு என்றனர்.
இப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று சொல்லத் துவங்கியுள்ளனர். ஏப்ரல் 19ல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி விமர்சிக்க துவங்கிய பின், ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றம் இது.
கடந்த 5ம் தேதி முதல் 19 வரை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டது.
ஏப்ரல் 19ல் நடந்த முதல் கட்ட தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தை பெற்றுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. 26ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்த மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள், காங்கிரசுக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன.
கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் பெரும் வெற்றியை பெறவுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடந்த, 14 தொகுதிகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லும். ராஜஸ்தானில் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

