ADDED : ஜூலை 11, 2024 11:18 PM
பொதுவாக முகூர்த்த நாட்களில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பத்திரப்பதிவு செய்ய விரும்புவது வழக்கம். அதன்படி, ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான இன்று, அதிக பத்திரங்கள் பதிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், 100 டோக்கன் அனுமதிக்கும் சார் - பதிவாளர் இடங்களில், 200 டோக்கன்களும், 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் இடங்களில், 300 டோக்கன்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
_____________
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 'சாய்ஸ் பில்லிங்' முறையை, மூன்று கட்டங்களாக மேற்கொள்ள, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு கட்டத்தையும், 10 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 22ம் தேதி முதல் கட்டமாக, சிறப்பு பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
பின், பொதுவான பாடப்பிரிவு மாணவர் களுக்கான கவுன்சிலிங், 29ம் தேதி துவங்கி, மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அனைத்து விபரங்களையும், www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

