ADDED : ஆக 07, 2024 02:03 AM
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, தேசிய அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் சார்பில், தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. தகுதியான நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருது குறித்த விபரங்களை, www.disabilityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். www.awards.gov.in என்ற இணையதளத்தில், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், 2024 - 2025ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்புகளான பி.வி.எஸ்சி., - ஏ.எச்., மற்றும் பி.டெக்., உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று காலை வெளியாகிறது. அதன் விபரங்களை, https:\adm.tanuvas.ac.in மற்றும் https:\tanuvas.ac.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம்.