ADDED : மே 07, 2024 09:09 PM

சென்னை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி மதுரை .உயர் நீதிமன்ற கிளையில் அப்பீல் செய்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக எழுந்த புகாரில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஏப்.30-ம் தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் தன் மீதான தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்பீல் செய்துள்ளார். மேலும் இடைக்கால ஜாமின் கோரியும் மனு செய்துள்ளார். இம்மனுக்கள் விசாரணைக்கு வருகிறது.