ADDED : ஏப் 29, 2024 06:09 AM
வரும் கல்வியாண்டில், குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடை தைத்து வழங்குவதை முன்மாதிரி திட்டமாகக் கொண்டு வர கல்வித்துறை ஆலோசித்துள்ளது.
பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதி செய்து, பள்ளி அளவில் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுவினர் மற்றும் உள்ளூரில் உள்ள தகுதிவாய்ந்த டெய்லர்களை தேர்ந்தெடுத்து, சீருடை தைத்து வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை மாணவ - மாணவியருக்கு சீருடைகள் தைக்கப்படுகின்றன. அளவெடுத்து தைப்பதற்கு தேவையான துணியின் விபரங்களை தலைமையாசிரியர்கள் சேகரித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், டெய்லர்களுக்கு மவுசு கூடும் வாய்ப்பு உள்ளது.
- நமது நிருபர் -

