தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'புள்ளிங்கோ' கட்டிங் கிடையாது: முடி திருத்தும் தொழிலாளர் முடிவு

'புள்ளிங்கோ' கட்டிங் கிடையாது: முடி திருத்தும் தொழிலாளர் முடிவு

'புள்ளிங்கோ' கட்டிங் கிடையாது: முடி திருத்தும் தொழிலாளர் முடிவு


ADDED : ஜூன் 01, 2024 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2024 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒன்சைடு, பாக்ஸ் கட்டிங், கோடு வரைதல் போன்ற, 'புள்ளிங்கோ' கட்டிங் செய்வது இல்லை என முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மருத்துவர் சமூக நலச்சங்கம்,முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின்மாவட்ட தலைவர் முத்துமாரி, செயலர் செந்தில்குமார், பொருளாளர் சேகர் ஆகியோர் கூறியிருப்பதாவது:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், ஜூன் 10ல் திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் சிகை அலங்காரம் செய்வதற்கு சலுான் கடைகளுக்கு வரும் போது, சமூக பொறுப்புடன் தொழிலாளர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

எனவே, மாணவர்கள் வலியுறுத்தினாலும் ஒன்சைடு, பாக்ஸ் கட்டிங், கோடு வரைதல் போன்ற புள்ளிங்கோ கட்டிங் செய்ய முடியாது என, மறுத்துவிட வேண்டும். இதை அனைத்து சலுான் கடை தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us