ADDED : மார் 15, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில், 100 இடங்கள் உட்பட, மாநிலம் முழுதும், 936 இடங்களில், தமிழக பட்ஜெட் உரை நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக, பெரிய எல்.இ.டி., திரையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட வசதியாக, நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன.
ஆனால், நேரடி ஒளிபரப்பை பார்வையிடவும், பட்ஜெட் அறிவிப்புகளை கேட்கவும், பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடின.