sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பகலில் சத்தம் 55 டெசிபல் தான் இருக்க வேண்டும்'

/

'பகலில் சத்தம் 55 டெசிபல் தான் இருக்க வேண்டும்'

'பகலில் சத்தம் 55 டெசிபல் தான் இருக்க வேண்டும்'

'பகலில் சத்தம் 55 டெசிபல் தான் இருக்க வேண்டும்'


UPDATED : ஆக 28, 2024 11:37 PM

ADDED : ஆக 28, 2024 11:34 PM

Google News

UPDATED : ஆக 28, 2024 11:37 PM ADDED : ஆக 28, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''தமிழகத்தில் நடப்பாண்டு ஒலி மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா, மஞ்சப்பை, பசுமை முதன்மையாளர்கள் விருது வழங்கும் விழா, சென்னையில் நடந்தது.

விழாவில், பசுமை புத்தாய்வு திட்டத்தின் கீழ் ஏழு நுால்கள்; மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு பாடல் குறும்படம் ஆகியவற்றை வெளியிட்டு, அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:

இயற்கையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளோம். அவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.

'மீண்டும் மஞ்சப்பை'


ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு தேங்கியுள்ள பிளாஸ்டிக்கை அகற்ற, மாவட்ட வாரியாக பிளாஸ்டிக் சேகரிப்பு பணி மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சிக்கு அனுப்பப்படும்.

'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தால், பிளாஸ்டிக் பயன்பாடு 25 சதவீதம் குறைந்துள்ளது. மஞ்சள் பை இயந்திரத்தில், 'கூகுள் பே' வழியே பணம் செலுத்தி, மஞ்சள் பை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தீபாவளியின்போது


குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், கல்லுாரிகள் பகுதியில், பகலில் ஒலி அளவு 55 டெசிபல்; இரவு 45 டெசிபல்; தொழிற்சாலை உள்ள இடங்களில் 75 டெசிபல் வரை இருக்கலாம். பொது இடங்களையும் கண்காணித்து வருகிறோம்.

ஒலி மாசால் செவித்திறன் பாதிக்கப்படும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே, இந்த ஆண்டு முழுதும், ஒலி மாசை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஒலி மாசை குறைக்க பசுமை பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது காற்று மாசு குறைந்திருந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

மஞ்சப்பை தயாரித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு!


சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில், 5 ரூபாய் விலையில், தரமான மஞ்சப்பை தயாரிப்புக்காக, 'பேக் கத்தான்' என்ற போட்டியில் பங்கேற்க, புதிய தொழில் நிறுவனங்களுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

வெற்றி பெறும் நிறுவனங்களுக்கு முறையே, 1 லட்சம், 75,000, 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், form.startuptn.in/bagathon என்ற இணையதளம் வழியே செப்., 5க்குள் விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us