ADDED : ஏப் 01, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் ரூ. 89 லட்சம் வரி பாக்கி செலுத்த வேண்டி நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான யாத்திரை நிவாஸ் எனும் தங்கும் விடுதி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. 98 அறைகள் கொண்ட இந்த விடுதி 2021ல் திறக்கப்பட்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. 2021 முதல் 2024 வரை இந்த தங்கும் விடுதி மற்றும் கோயில் கிழக்கு வீதியில் உள்ள தங்கும் விடுதிக்கு ராமேஸ்வரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி ரூ.89 லட்சம் இதுநாள் செலுத்தவில்லை.
இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும், கோயில் நிர்வாகம் செலுத்தவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று இறுதியாக மீண்டும் நகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

